பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்ட துவக்க விழா



பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்ட விழாவானது நாடு முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.  அதனை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள்  நேரலையாக காண ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் ஏற்பாடு செய்திருந்தது. ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திரு. தியாகராஜ நட்டர்ஜி தலைமை வகித்து, விவசாயிகளிடம் உரையாடினார். 

இவ்விழாவில் ஸ்காட் நிர்மாண் கிராம மேம்பாட்டு திட்ட இயக்குனர் திரு. ஆனந் முன்னிலை வகுத்தார். முன்னதாக வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி சீனிவாசன் வரவேற்புரை வழங்கி, விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின்  கௌரவ நிதி உதவி திட்டம் பற்றி விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமரின் மனதின்  குரல்  நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து நேரலையில் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இதன் சிறப்பம்சங்கள் மற்றும் அவருடைய அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இறுதியில் விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடல் மூலம் கேட்டறிந்தனர். இவ்விழாவில் 126 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை அடுத்து விவசாயிகள் மையத்தின் பல்வேறு செயல்விளக்க திடல்களை கண்டு பயன்பெற்றனர். இவ்விழாவினை   வேளாண்மை அறிவியல் மையத்தின் விஞ்ஞானி முருகன் தொகுத்து வழங்கினார்.