கறவைமாடு வளர்ப்போருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி



தூத்துக்குடி ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் நபார்டு வங்கி இணைந்து "சிறுபண்ணையாளர்களுக்கு கறவைமாடு வளர்ப்பில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் மாசில்லா தொழில் நுட்ப பயிற்சி” என்ற தலைப்பில் 3 நாட்கள் திறன்வளர் பயிற்சி கயத்தார் அருகில் தலையால் நடந்தான்குளத்தில் நடத்தப்பட்டது. கயத்தாறு வட்டாரத்தை சார்ந்த தலையால்நடந்தான்குளம் கிராமமானது "பிரதம மந்திரியின் விவசாயிகள் வருமானத்தை 2022குள் இரட்டிப்பாக்கல்" என்ற திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வேளாண்மை அறிவியல் மையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து நிலைய மற்றும் களபயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கால்நடை வளர்போருக்கு  3 நாள் திறன் வளர் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இப் பயிற்சியின் முதல் நாளன்று கால்நடை வளர்ப்பில் உள்ள பிரச்சனைகளை கால்நடை வளர்ப்போரிடம் இருந்து கேட்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து வேளாண்மை அறிவியல் மையத்தை சார்ந்த முதன்மை விஞ்ஞானி மற்று மருத்துவர் சீனிவாசன் அவர்கள்கால் நடைபராமரிப்பு முறைகள் மற்றும் நோய்மேலாண்மை முறைகள் பற்றி விளக்கி கூறினார்

இரண்டாம் நாளன்று திருநெல்வேலி கால்நடை அறிவியல் கல்லூரியை சார்ந்த உதவி பேராசியிரியர் திரு.விஜயகுமார் கறவை மாட்டிக்கிற்கான தீவன மற்றும் ஊட்டச்சத்துக்கள் பற்றி விளக்கி கூறினார். அதனை அடுத்து உதவி பேராசியிரியர் திரு.சத்யபாரதி கறவைமாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி விளக்கி கூறினார்.

இப்பயிற்சியின் இறுதி நாளன்று, பயிற்சியில் கலந்து கொண்டோர் வகைக்குளம் வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பசுந்தீவன வளர்ப்பு முறைகள், மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், பஞ்சகவ்யம் மற்றும் பூச்சிவிரட்டி போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றியும் வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்பவல்லுனர்கள் செயல் விளக்கத்தோடு விளக்கினார்கள்.

பயிற்சியின் நிறைவு விழாவில், நபார்ட் வங்கியின் பொதுமேலாளர் திரு.விஜயபாண்டியன் & வேளாண் அறிவியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி (பொ) மருத்துவர். வி.சீனிவாசன் மற்றும் பிற வல்லுநர்கள் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றோர்க்கு சான்றிதல் மற்றும் கால்நடைவளர்ப்பு பற்றிய கையேடும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 32 கறவைமாடு வளர்ப்போர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இப்பயிற்சியினை வேளாண் அறிவியல் மையத்தின் வல்லுநர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.