ஸ்காட் வேளாண் அறிவியில் மையமானது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் வேளாண்மை மற்றும் அதன் சார்பு துறைகளின் உற்பத்தி, வருவாய் அதிகரித்தல் முலமாக வேளாண் மக்களை உயர்த்துதல் என்ற உன்னத நோக்கத்துடன் 1995 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் கிராமத்தில் துவக்கப்பட்டது. விவசாய பல்கலைகழகம், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்களில் கண்டறியப்படும் தொழில் நுட்பங்களை விவசாய பெருமக்களுக்கு உடனுக்குடன் பரிமாற்றம் செய்திடும் உன்னத பணியினை செயல்படுத்தி வரும் இம் மையம் பல்வேறு நவீன வசதிகளை கொண்டு உள்ளது.

       ஸ்காட் வேளாண் அறிவியில் மையம் ஆராய்ச்சி, செயல்விளக்கம், பயிற்சி, தகவல் பரிமாற்றம், தகவல் தொகுப்பு போன்றவற்றிற்கு தேவையான அனைத்து நவீன உள் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. விசாலமான பயிற்சி, கருத்தரங்கங்கள், நவீன ஒளி, ஒலி வசதிகளுடன் கூடிய விவாத அறைகள், வேளாண் நூல்கள் நிறைந்த நூலகம், ஆய்வகங்கள், நவீன வேளாண் சோதனை கருவிகள், அகன்ற அலை வரிசை கொண்ட கணிணி அறை போன்ற வசதிகள் கொண்டது. மேலும் பயிற்சியாளர்கள், பயிற்சி பெறுவோர், ஆராய்சியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் கொண்டுள்ளது..

இதர வசதிகள்

  • நன்கு தேர்ந்த தகுதி வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள்.
  • 300 நபர்கள் பங்கு பெற ஏற்ற கருத்தரங்கு கூடம்
  • 30 நபர்களுக்கான குளிருட்டப்பட்ட விவாத, பயிற்சி கூடங்கள்
  • 40 பயனாளிகள் தங்குவதற்கான உழவர் விடுதி
  • மனையில் ஆய்வு கூடம்
  • நிரந்தர வேளாண் பரிசோதனை கூடம்
  • சொட்டு நீர் பாசன மாதிரி பண்ணை
  • நிழல் மற்றும் பசுமை கூடாரங்கள்
  • பயனாளிகள், பயிற்சி பெறுவோர்க்கான உணவு கூடம், வாகன நிறுத்துமிடம்.